பக்கம் எண் :

146மதுரை வீரன் கதை

  
வீரனுக்கு வந்த

1870

     விதிப் பயனைத்தீரும் அம்மா!
கைகால் வளர்ந்து
     கடுக எழுந்திருக்க
வேண்டும் அம்மா தாயே
     வேதாந்த நாயகியே”
என்று சொல்ல நாயக்கர்
     ஈஸ்வரியும் தான் பார்த்து
 
கால் கை வளர்தல்:
 
கால் கையும் தான் வளர
     கட்டளையும் இட்டாள் காண்
திருமலை நாயக்கரும்

1875

     திரும்பி வருவதற்குள்
மீனாக்ஷி கிருபையினால்
     வீரனுக்கு முன் போல்
கால்கையும் தான் வளர்ந்து
     கடுக எழுந்திருந்து
திருமலை நாய்க்கர் முன்னே
     சீக்கிரமாய் ஓடிவந்து்
 
வீரனது விளக்கம்:
 
“வாரும் ஐயா ராஜாவே
     வார்த்தை சொல்ல கேளும் ஐயா
மாறுபடா வம்சத்தில்

1880

     வந்து பிறந்தேன் காண்
மாறு படா மேனியிலே
     மாறு படா ஆச்சுது காண்
பூவையால் என்உயிர்
     பொன் உலகம் போகுது ஐயா
அன்று எனக்கு
     ஆயன் எழுத்துப்படியே