பக்கம் எண் :

மதுரை வீரன் கதை147

  
வாய்த்தது” என்று வீரன்
     வண்மை உடன் இருக்க
காதினால் கேட்டு

1885

     கண்ணீர் விட்டார் நாய்க்கரும்
“வாழ்வும் பெரும் செல்வம்
     மாயம் இது ராஜாவே
நீரின் மேற் குமிழி
     நிலைமை அற்ற வாழ்க்கை இது
என்று இருந்தாலும்
     இறப்பது நிச்சயம் தான்
சலித்து நீர்தான் அழுக
     தருமமோ ராஜாவே”
என்று சொல்லி வீரனுமே

  1890

     இவ்வண்ணம் தேறி நின்றான்
 
உடன் கட்டை:
 
“பெண்களில் இருவருமே
     பிரியமாய்த் தீக்குதிக்க
நாற்சவுக்கமாக190
     நலமான தீக்குழியை
உண்டு பண்ணி வைக்க நீரும்
     உத்தாரம் சொல்லும் ஐயா”
திருமலை நாய்க்கரும்
     சேதி இது அறிந்து
வைகைக்குத் தான் போய்

1895

     மாந்தோப்புக்குள் புகுந்து
தீக்குழி ஆன
     செம்மை உள்ள தாவதனை191
கண்டு குறித்து
     கடுகவே வெட்டி வைத்து
சந்தனக் கட்டைக் கொண்டு
     சதுராகத்தான் பரப்பி