தீக்குழியைச் சுற்றி ஜெய மங்களம் சொல்லி வேதியரைத் தான் அழைத்து |
| 1900 |
விதியாகச் செய்” என்றார். ஆலாத்தி சுத்தும் பெண் ஆனதொரு வெள்ளையரும் பொன்னான திருமேனி பொம்மியரும் கூடவே தான் ஏற்றமுள்ள வீரனுமே இருவரையும் தான் அழைத்து அன்ன தானம் சொர்ண தானம் அன்பாகச் செய்வித்து கோதானம் பூதானம் |
| 1905 |
கோதையரால் செய்வித்து “காரிகை நீங்கள் இருவர் கையாலயம் சேரும்” என்றார், காதினால் கேட்டுக் கன்னிகள் தானும் அப்போது பூரித்து மேனி பொங்கி இருவரும் தான் பூண்டிருந்த ஆபரணம் பொரி பொரியாய் தோன்றி எடுக்க சந்தோஷமாய் இருவர் |
| 1910 |
சாமி முத்து பாதத்தில் அடைவுடனே தெண்டன் இட்டு அன்பாய் இருபேரும் இருவரும் தெய்வத்தை இசமாகவோ192 தொழுது சுத்திவந்து தீக்குழியைச் சீக்கிரமாய்த் தான் மூடி |
வீரன் செய்கை: |
சடங்குகள் எல்லாம் சதிராகத்தான் முடித்து |
| 1915 |