ஸ்நானம் அது செய்தபின்பு தயவாய் பிராமணர்க்கு வஸ்திரம் காசு பணம் வன்மையாய்த் தான் கொடுத்து பொற்றாமரைக் குளத்தில் பொறுமையுடன் போய் இறங்கி கோடாலி முடியவிழ்த்து குதித்துமே ஸ்நானம் செய்து சிவ சிவா என்று திருநீறு தானும் இட்டு சந்தனம் புனுகும் |
| 1920 |
சவ்வாதுடன் தான் அணிந்து பூசித் திருமேனி எங்கும் பொங்கமுடன் கதம்பம் மிதியடியும் பூண்டுமே ருத்திராக்ஷம் தாம் அணிந்து என் தாயே மீனாக்ஷி ஈஸ்வரியே என்று சொல்லி காளை முத்து வீரனுமே கடுகெனவே தான் வந்து ஆதி சிவனே என்று |
| 1925 |
அன்புடனே தான் வந்து மீனாக்ஷி சந்நிதி முன் வீரையனும் வந்து நின்று முக்கால் வலம் வந்து மூவிருகால் தெண்டனிட்டு திருமலை நாய்க்கர் தனை திரும்பி முகம் பார்த்து “வாரும் என்று சொல்லி வன்மையுடன் தான் அழைத்து மீனாக்ஷி பொற்பாதம் |
| 1930 |
| இதமுடனே சேர்வதற்கு |