மீனாக்ஷீயம்மன்” அப்போ விடுதிபோய் சேரும் என்றாள் அப்படியே எல்லாரும் அரண்மனைக்கு போய் சேர்ந்தார்கள்! |
வீரன் வேண்டுதல் |
அன்று முதல் மூன்று நாள் அணிமுத்து வீரனுக்கு பூசை நமஸ்காரம் புசிப்புமே தானும் இல்லை பார்த்து நல்ல வீரனுமே |
| 1950 |
பதறியே கோபம் கொண்டு இப்படிக்கு தான் இருந்தால் ஏற்காது கலியுகத்தில் என்று நினைந்து எழுந்திருந்த அந்நேரம் மீனாக்ஷீ சந்நிதியோய் விதியுடனே தெண்டனிட்டு “என்தாயே மீனாக்ஷீ எனக்கு புத்தி சொன்னபடி பட்டணத்தில் உள்ளோரும் |
| 1955 |
பராமரிப்பதில்லை எனை இதுபார்த்து நீ இருந்தா என்வயிறு பசியாதோ ஆதலால் பட்டணத்தில் அமர்ந்த மனிதர்களைக் கொள்ளை கொளும், எனக்கு கூறுவையே ஆனாக்கால் காவடியும் தோள் ஏந்தி கம்பத்தடி வருவேன் அம்மா என்று தான் சொல்ல |
| 1960 |
| ஈஸ்வரியும் தான் கேட்டு |