பக்கம் எண் :

152மதுரை வீரன் கதை

  
மீனாட்சி கூறியது
 
“கம்பத்து அடிவீரா
     காரியத்தைச் சொல்லுகிறேன்
“துணிவு கூறும். வீரா!
     துள்ளாதே இந்நேரம்
திருமலை நாயக்கர் தான்
     செம்பொன் மணி மாளிகையில்
உள்ளே நுழைந்து
     உபாயம் ஒன்றை செய்வாய் நீ
அவ்விடத்தில் உள்ளவரை

1965

     அதட்டி மிகச் சொற்பனத்தை
பண்ணி வந்த பூசை
     பாங்குடனே வாங்கு என்றாள்
 
வீரன் செயல்
 
என் தாயே மீனாக்ஷி
     இது போதும் என்று சொல்லி
திருமலை நாயக்கர் தான்
     செம்பொன் மணி மாளிகையில்
ஆக்கிர மித்துப்போய்
     அதட்டி தொடை தட்டி
நஞ்சு தின்று நஞ்சறுக்கும்

1970

     நடுச்சாம வேளையிலே
பட்டணத்தில் உள்ள
     பார முனிகள் எல்லாம்
வண்டத்துரை வீரன்
     வருகின்ற வழிதனிலே
எதிரே வரப் பயந்து
     எல்லோரும் தாம் அளிப்பார்
மன்னர் அரண்மனையில்
     மதில் ஏறி வீரன் போய்
சப்பிர மஞ்ச கூடத்தில்194
     தனித்துச் சயனம் செய்யும