திருமலை நாயக்கர் தனைச் செவ்வாய் தான் பார்த்து பதறி எழுந்து இருந்து பைங்கிளியைத்தான் எழுப்பி “காணாத சொப்பனந்தான் கண்டு பயந்தே னடி” என்று சொல்லக் கேட்டு இயற்கை உள்ள பெண்சாதி “எது நடந்தாலும் |
| 1980 |
ஈஸ்வரியாள் மீனாட்சி பொற்பாதம் தணை ஒழிய புகலுவதற்கே ஏது மில்லை” மன்னவர்க்குத் தேறுதலை மங்கையரும் தான் உரைத்தாள் சொல்லுகிற வார்த்தை எல்லாம் துரைவீரன் கேட்டு இருந்து ‘ஆகட்டும் என்று’ அரண்மனையை விட்டு மெள்ள கோட்டை தலைவாசல் |
| 1985 |
குதிரை லாயம் புகுந்து பஞ்ச கலியாணி பட்டத்துக் குதிரையும் அறுத்தாரே நொடியில் ஆங்காரம் கொண்டவன் காண் மாட்டு மந்தையில் புகுந்து மகாபூசை கொண்டான் காண் உக்கிரமுள்ள சேவகர்கள் ஒரு நூறு தலையாரி படுத்திருக்கும் சாவடியில் |
| 1990 |
பாங்குடனே போய் புகுந்து சுழற்றி எறிந்தான் காண் அஞ்சாமல் வீரன் போய் மண்டியிட்டு வீரன் மதயானையை அடக்கி |