பக்கம் எண் :

154மதுரை வீரன் கதை

  
கன்னிகைப் பெண்கண்
     கண் உறங்கும் வேளையிலே
கன்னியர்கள் அருகில் வந்து
     காளைமுத்து வீரனும் தான்
அபயம் என்ற சத்தம்

1995

     அண்டம் எல்லாம் தான் அதிர
காரணனும் தென் மதுரை
     கம்பத்து அடியில் வந்தான்
 
மன்னன் பூசை:
 
அன்றிரவு சென்று
     அலர்கதி ரோன் வந்துதித்தான்
கச்சித் திருமலையார்
     காலையில் எழுந்திருந்து
கால்கைகள் சுத்தி செய்து
     கனத்த பணி பூண்டு
கட்டியங்கள் கூற

2000

     கவரிதனை வீச
நாதசுர மேளம்
     நாட்டியங்கள் ஆடிவர
மந்திரிகள் சேனை
     மகிழ்ந்து மன்னர் கூட்டமுடன்
ஆசார வாசல் விட்டு
     அரண்மனையும் தான் கடந்து
சொக்கரது சந்நிதிக்கு
     துருசாக ஓடிவந்து
அங்கையற்கண் மீனாக்ஷி

2005

     அம்மனுட சந்நிதியில்
மீனாக்ஷி முன்பாக
     வேந்தன் விரைவில் வந்து
முக்கால வலம் வந்து
     மூவிருகால் தெண்டன் இட்டு