பக்கம் எண் :

மதுரை வீரன் கதை155

  
“என்தாயே மீனாக்ஷி
     ஈஸ்வரியே இப்போது
காணாத சொப்பனங்கள்
     கண்ட விதங்கள் என்ன
அதிசயங்கள் வந்த வகை

2010

     அடியேன் அறிவதற்கு
வழியா உரைக்க வேணும்
     வாய்மை உள்ள ஈஸ்வரியே!”
பார்வேந்தன் அப்போது
     பாதத்தில் தான் விழுந்தான்
வாழ்மதுரை சொக்கரும்
     மதுரை மீனாக்ஷியரும்
“அப்பா மகனே
     அதிசயங்கள் வந்தகதை
காரணமாய் வந்த கதைக்

2015

     கம்பத்தடி வீரன்
பட்டபாடு எல்லாம்
     பாரோர் நினைக்கவில்லை
பொந்தி195 பசி மெத்த
     பொல்லாத வீரனுக்கு
உண்டானதினாலே
     ஓடி வந்தான் உன் மனைக்கு
வீரன் குறை ஓழிய
     வேறொன்று தானும் இல்லை
பட்டணம் எங்கும்

2020

     பல தெருவார் பூசை செய்ய
கம்பத்து அடியில் வந்து
     காணிக்கை தானும் வைத்து
சந்துக்குச் சந்து
     தனிப் பூசை தானும் இட்டு
இந்தப் படிக்கு
     இஷ்டம் உடனே தொழுதால்