வீரன்குறை தீர்ந்து வெகுவாய் மனங்களிப்பான்!” என்று சொல்லி ஈஸ்வரியும் |
| 2025 |
இதமுடனே வாக்கு உரைக்க திருமலை நாயக்கர் சீக்கிரத்தில் தான் எழுந்து கம்பத்து அடியில் வந்து காளை முத்து வீரனுக்கு ஐந்நூறு பொன் கொண்டு அபிஷேகம் பண்ணி வைத்து மண்டபமும் கட்டி வைத்து மகா பூசையும் கொடுத்து தேங்காயும் உடைத்து |
| 2030 |
தூப தீபம் கொடுத்து இளநீரும் செங்கரும்பும் இதமான பால் பழமும் வீதிக்கு வீதி வேண மட்டும்196 பூசை இட சந்துக்குச் சந்து தனி பூசைதானும் இட எல்லோர் அறிய எங்கும் பறை அறைய |
மக்கள் செய்த பூசை: |
| மதுரையில் உள்ளோர்கள |
| 2035 |
வகையுடனே தானும் அப்போ வீதிக்கு வீதி வேணபடி பூசை இட்டார் வீரன் இடத்திற்கு வேந்தன் வந்தே தொழுது முப்பழமும் இட்டு “முன் பூசை போடுகிறேன் வந்த வினைகள் எல்லாம் மாளவே செய்யும் ஐயா” |