பக்கம் எண் :

158மதுரை வீரன் கதை

  
ஆண் பிள்ளை பிறந்தால்

2055

     ஆணிமுத்து வீரன் என்று
இடவேணும் பேர் என்று
     இயம்பினார் நாயக்கரும்
 
நாயக்கருக்குக் குழந்தை
 
கும்பிட்டு வாங்கி
     குயில் மொழியாள் தான் தரித்தாள்
மூன்னு மாதம் சென்று
     முருக்கம்பூ மேனியரும்
புத்திரனும் உண்டானான்
     பொற்கொடியும் அப்போது
பத்தான மாதத்தில்
     பாலகனையும் பெற்று எடுத்தாள்
பிள்ளைக்கு வீரன்

2060

     பேர் வைத்து அந்நேரம்
ஐநூறு வண்டியில்
     ஆனதொரு சர்க்கரையும்
மதுரை அறுகாதம்
     வாழ்மதுரை முன்காதம்
ஒன்பது காத வழி
     ஊர் தோறும் சர்க்கரைகள்
வீதிக்கு வீதி
     வேணமட்டும் வழங்கி வர
வேதியர் எல்லாம்

2065

     வெகுவாய் தானம் கொடுத்தார்
சொக்கருடன் மீனாக்ஷி
     துலங்கு மதில் கோயில்சென்று
 
மன்னன் வேண்டுதல்
 
முக்கால் வலம் வந்து
     மூவிருகால் தெண்டன் இட்டு