அறுபது பொன் எடுத்து அபிஷேகம் பண்ணிவைத்து அரண்மனைக்கு வந்து அரசன் கிருமலையும் வீரனுக்குப் பூசை |
2070 |
விதமுடனே செய்து “பூதலத்தில் உள்ளவர்கள் பூசைகொடுப்பார்கள் உன்காவல் உன்அடிமை உண்மை உள்ள வீரையனே: தாங்காத்துக் கொண்டு தயவாகக் காரும் ஐயா ஐயாவே வீரனே அனைவரையும் காத்திடுவாய் அவர் அவர் பங்கில் |
2075 |
அனுதினமும் நீ இருந்து என்னையும் காத்து இரட்சிக்க வேனும் ஐயா! என்று திருமலையனின் இன்பமுடனே தொழுது வாழ்மதுரை சொக்கர் மதுரை மீனாக்ஷி அம்மாள் தாங்கள் கிருபையினால் தாரணி யோர்வாழ்ந்து இருக்க நாடு தழைக்க |
2080 |
நல்ல மழை தான் பொழிய! |
வாழி |
தேவர்களும் வாழி தேசத்தோர்கள் வாழி அங்கையற் கண் மீனாக்ஷி அம்மையும் தான் வாழி |