பக்கம் எண் :

மதுரை வீரன் கதை19

  
               மதுரை வீரன் கதைப் பாடல்
 
மதுரை வீர சுவாமி கவி
 
உலகமிசை மன்னுயிர்கள் தன்னுயிர் எனக்கருதி
     ஒருகவிதை நிழலில் நின்றே
ஒன்னவர் தமை ஜெபித்து ஓங்கு செங்கோல் ஓச்சி
     உயிர் காசிநகர் ஆள்வோன்
உளமகிழ்ந்திட மதலையாய் உதித்தாய் அன்று
     ஒல்கு காட்டில் வைகியே
உரகனால் ஆதரவு பெற்றபின் புன்னாட்டில்
     உறைமாகி கன மனையினில்
நில்லெனத் தோன்றி அவனால் வீரன்என்று பெயர்
     நிலையாகவே அடைந்தே

5

நிருபனாம் பொம்மணன் சீமை உற்று அவன் ஈன்ற
     நேரிழை தனைக் கவர்ந்தும்
நிறைபுகழ் பெறும் விஜயரங்கன் எனும் மன்னனது
     நீள்வாயில் காவல் செய்தும்
நிகரில் பல வளம் எய்து மதுரையில் கள்ளர்தமை
     நெஞ்சம் கலங்க மோதி
வலன் உயர்ந்தே நல்ல குணபூஷணம்கொள் திருமலை
     நாயக்கனிடம் மேவியே
மங்கை வெள்ளம்மையைக் கண்டு அன்பு பூண்டு அவள்
     மருவிடச் சிறை எடுத்தும்

10

வழி தவழும் ஆடகச் சிகர கோபுரம் அதனில்
     வளர் சொக்கநாதர் அருகில்
மன்னும் மீனாட்சி அருளினை அடைந்தே உம்பர்
     வாழ்த்தி மலர்மாரி சொரிய
இலகும் அவ் ஆலயத்துள் வயங்கும் கனக
     எழில் கம்பம் அதில் மேவியே
இப்புவி நிமித்தியார்த் தம் இருசி குட்டி சாத்தன்
     ஏவல் சூனியத்தின் உடனே