நாட்டு வளம் |
மாதம் மும்மாரி1 வழங்கும் வளநாடு காதம் மணம் வீசும் கற்பகம்2 சேர் நன்னாடு கரும்பின் கணுக்கள் முகத்தைக் காட்டும் மகாநாடு விரும்பி அறம் வளர்க்கும் மேலான நன்னாடு முப்போகமும்3 விளையும் |
5 |
மூத்தோர் வாழ் நன்னாடு எப்புறமும் கங்கை இலங்கும் திருநாடு நவதானியம் விளையும் நல்ல வளநாடு தவமறையோர் மாமுனிவர் தங்கும் வளநாடு தாமரை பொய்கைகளும் தன்மலர் சேர் வாவிகளும் ஆமை உலாவும் |
10 |
அழகான கேணிகளும் பொன்னுமணி கொழிக்கும் புண்ணிய ஆறுகளும் மன்னும் தரளம்4 வழங்கிய ஓடைகளும் சங்கு தவழ்ந்து உலவும் தாழ்வில்லா நஞ்சைகளும் எங்கும் மணி விளையும் எழிலான புஞ்சைகளும் பாக்கு மரச் சோலைகளும் |
15 |
பன்மலர் பூஞ்சோலைகளும் |