பக்கம் எண் :

24மதுரை வீரன் கதை

  
இந்த வளம் மிகுந்த
     எழிற்காசி மாமலையைக்
கந்தனது வாயாலும்
     கட்டுரைக்க மிக்க அரிதே
 
நகர வளம்
 
காசினியோர்14 வாழும்
     காசி எனும் மாநகரம்
தேசம் மிகுத்த இலங்கும்

50

     தெய்வீக மாநகரம்
செம்பொன் மதில் சூழ்ந்த
     சிங்கார மாநகரம்
அம்பொன்னால் மாடகூடம்
     அமைந்திருக்கும் மாநகரம்
கோபுரம் எங்கும்
     குலவும் திருநகரம்
மாபுர மன்னர் மன்னர்
     மன்னுந் திருநகரம்
யானை கட்டி வாழும் முடி

55

     அரசர் வாழ் வீதிகளும்
சேனைத் தலைவர் பலர்
     சேர்ந்து வாழ் வீதிகளும்
வேந்தர்க்குக் கோல் கொடுக்கும்
     வேளாளர் வீதிகளும்
சாந்து சவ்வாது பன்னீர்
     தான் விற்போர் வீதிகளும்
சாதகந்தான் குறிக்கும்
     சாஸ்திரிமார் வீதிகளும்
நீதிநெறி தவறாத 6
     நல்லவர்தம் வீதிகளும்
கோல மணி விளக்கும்
     குச்சிலியர்15 வீதிகளும்