பக்கம் எண் :

மதுரை வீரன் கதை25

  
வேலைபழிக்கும் விழி
     வேசியர் வாழ் வீதிகளும்
கோடி குதிரை அணி
     குறித்திருக்குஞ் சாலைகளும்
ஆடவரும் குதிரை
     அணியிருக்கும் சாலைகளும்
கடையும் கடைத்தெருவும்

65


     கனமான மாடங்களும்
கோடை தரும் செம்பொன்
     கொட்டி வைத்த கூடங்களும்
வீதிக்கு வீதி
     விளங்கும் சில ஆலயமும்
நீதி வழுவாத
     நெறி மன்னர் ஆலயமும்
மன்னர்க்கு நன்மதில் சொல்
     மந்திரிமார் மாளிகையும்
அன்னம் கொடை அளிக்கும்

70


     அழகான மாளிகையும்
ஏழுநிலை மாடங்களும்
     எழிலான கூடங்களும்
தாழும் அகழிகளும்
     தங்கத்தால் கோட்டைகளும்
போர்வீரர் எப்புறமும்
     புடைசூழும் காவல்களும்
தேர்வீரர் போர்வீரர்
     திக்கெட்டும் காவல்களும் 
வாள் உறையில் வையாத     

75


     வலுவீரர் காவல்களும்
தோள் கொட்டி தட்டி நிற்கும்
     துடி சூரர் காவல்களும்
கறிபில் வழுவாத
     கன்னியர் கூட்டங்களும்