பக்கம் எண் :

26மதுரை வீரன் கதை

  
அன்பில் குறையாத
     அடியார்கள் கூட்டங்களும்
சன்மார்க்கர் நீங்காத
     சற்குணங்கள் கூட்டங்களும்

80

துன்மார்க்கர் இல்லாத
     துரைமக்கள் கூட்டங்களும்
பந்து முலைமாதர் பலர்
     பந்தடிக்கும் மேடைகளும்
இந்து16 நுதல் பெண் கூடி
     இளைப்பாறும் மேடைகளும்
கல்வி பயிலும்
     கனமான17 சங்கங்களும்
செல்வர் மகிழ்ந்து
     செருக்குறு நற்சங்கங்களும்
மூலைக்கு மூலை
     முத்துக் களஞ்சியமும்
சாலைக்குச் சாலை
     தங்கக் களஞ்சியமும்
வீடுகள் எங்கும்
     விளக்கும் திருமணமும்
நாடும் சிறுவர்கட்கு
     நல்ல திருமணமும்
மாணிக்கத்தால் இழைத்த
     மன்னவர் மணிமண்டபமும்

85

ஆணி பொன்னால் அமைந்த
     ஆஸ்தான மண்டபமும்
செண்டு முலையார் ஆடும்
     தெய்வத் திருச்சபையும்
வண்டு விழியார் ஆடும்
     மன்னர் திருச்சபையும்
அன்ன மயிலாடும்
     அழகான இல்லங்களும்