பக்கம் எண் :

மதுரை வீரன் கதை27

  
வண்ணக் கிளிகள் கொஞ்சும்
     வாகான18 இல்லங்களும்
போர் தொழில் கற்க மன்னர்

95

புரிந்திட்ட நல்லிடமும்
     எல்லா வளமும்
இரைந்த திருக்காசிநகர்
 
மன்னன் மகிமை
 
வல்லாண்மை மன்னர் பலர்
     வந்து பணியும் நகர்
இந்த திருநகரில்
     என்றும் வரன் முறையாய்
தன்னம் தனியே
     தனி செங்கோல் தான்செலுத்தும்
மன்னும் பொறுமையாலே

100

     வண் பூமிக்கு ஒப்பானோன்
கன்னல் இளமாறனைப் போல்
     கட்டழகு தன்னுடை யோன்
சொன்ன மொழி தவறான்
     சொல் அரிச்சந்திரன்தான்
கன்னன் கொடை மாற
     கனகம் அளித்திடுவோன்
மன்னு அவன் போரிலே
     வள்ளி மணவாளன் ஒப்பான்
சொல்லு மனு நீதியிலே

105

     தூயதச ராஜனையான்
தொல் உலகை ஆளும்
     துளசி மகா ராஜன்
மங்காது நீதி நெறி
     மாநிலத்தை ஓர் குடைக் கீழ்
செங்கோல் செலுத்தி
     செயல் பெற்று வாழ் நாளில்