அரசவைக் கோலம |
சொல்லு அமைச்சர்19 சூழ்ந்து வரத் |
110 |
துளசி மகாராஜன வல்லமுடி20 தரித்து மனு செங்கோல் கை பிடித்து ஆலவட்டம் சாமரைகள் அணி அணியாய் வீசிவர கோலம் உள்ள மாதர் நிறை கும்பம் எடுத்து வர ஆலத்தி தீபம் அறிவை மாதர் தாங்கி வர சீல மறையோர்கள செய21 வாழ்த்து கூறி வர கன்னியர்கள் ஆடிவரக் |
115 |
கணிகைமார் பாடி வர மன்னர் படை நெருங்க மற்றும் உள்ளோர் தான் நெருங்க வட்டக் குடை பிடிக்க வாள் வீரர் கைபிடிக்க பட்டுக் கொடை பிடிக்க பல விருது தான் பிடிக்க பற்பல வாத்தியங்கள் பறவை போல் சத்தம் இட சொற்புலவோர் நாற் கவியும் |
120 |
சொல்லி துதித்து நிற்க சின்னங்கள் எல்லாம் சிறப்பாய் பிடித்து நிற்க மன்னிய22 நாற் சேனை வகை வகையாய்ச் சூழ்ந்து நிற்க அட்ட சிங்கம் தாங்கும் ஆஸ்தான மண்டபத்தில் பட்ட23 மன்னரோடு பண்பாய்க் கொலு இருந்தான்? |