துளசியின் தோற்றம் |
மண்டலத்தைத் தான் மதிக்கும் |
125 |
மன்னன் மணி முடிதான் கடல் எல்லாம் தான் மதிக்கும் காதலன் தன் கணையாழி வாகு வலயமுந்தான் வான் உலகம் தான் மதிக்கும் சேகு வைர மணி செகத்தை25 விலை மதிக்கும் மார்பில் பதக்க நிறை மதி ஒளியை மாற்றி விடும் சோர்வு ஒளி பணிகள் |
130 |
சூரியனைத் தோற்கடிக்கும் இந்த வகை பணிகள் இட்டிருக்கும் மன்னவன் முன் பந்தமொரு26 தேசமன்னர் பகுதி கொடுத்து நிற்க கட்டியர்கள் எச்சரிக்கை கை கட்டி கூடி நிற்க நட்டுவர் பின் மாதர் பலர் நாட்டியங்கள் செய்து நிற்க வெள்ளைத் தடிக்காரர் |
135 |
விதவிதமாய் வந்து நிற்க துள்ளும் படை வீரர் துடிப்புடனே வந்து நிற்க சேனை தலைவர் எல்லாம் திறமுடனே சேர்ந்து நிற்க யானை தலைவர் எல்லாம் அஞ்சலொடு27 சேர்ந்து நிற்க தையலர்கள் சங்கீதம் தான் பாடி முன்பு நிற்க |