பக்கம் எண் :

30மதுரை வீரன் கதை

  
மங்கள வாழ்த்து நிறை

 140

     மங்கிலியர்28 வாழ்த்தி நிற்க
சங்கை29 இல்லாமல் பொன்-
     தானம் கொடுத்து நிற்க
எங்கள் அரசனார் அருக்கும்
     அந்த வேளையிலே
 

வேந்தனது வினா
 

பொங்கமுடன்30 அவ் அரசன்
     புத்திரன் இல்லாமையினால்
வேதாந்த வேதியரை
     வேதப் பிராமணரை
சாதகரை மற்று முள்ள

     145

     சாஸ்திரத்தில் வல்லவரை
பார்த்தே ஒரு வார்த்தை
     பார்த் தீபர் சொல்லலுற்றார்
“கீர்த்தி பெற்ற விற்பனரே
     கேள்வியினில் வல்லவரே!
அறுபத்து நான்கு கலை
     யாவும் உணர்ந்தவரே
மறு வில்லா என் குடிக்கு
     மைந்தன் இல்லாமையிலே
சிந்தை தளர்ந்து
     திகில் கொண்டேன் பல நாளும்

    150

எந்தவழியும் பிள்ளை
     இசைந்த வழி சொல்வீர் என்று
பூதலம்32 ஆளும் காசிப்
     பூ பாலன்33 சொன்னவுடன்
 

வேதியரது விடை
 

வேதப் பிராமணர்
     விற்பனர்கள் சொல்லலுற்றார்