| வந்துநற் கெங்கைதனில் மனைவி கரம் பிடித்து சிந்தை மகிழ்ந்து திவ்விய |
| 170 |
| தீர்த்தம் ஆடியப் பின் பல்லாயிரம் கோடி பார்ப்பனர்க்குத் தானம் செய்ய இல்லார் பல்லோர்க்குத் தான் ஏகமாய்ச் செய்தபின்பு காசி விசுவநாதன் கனகோபுரம் கண்டு ஆடையுடன் வணங்கியக் கோயில் நாடி மன்னன் மன்னர் புடைசூழ |
| 175 |
மந்திரி மார் தான்தாழ சந்நிதி வீதியிலே தார்வேந்தன் வந்தபின்பு அண்டத்து அளாவும் பல ஆன பொற்கோபுரமும் எண் திசையும் காண இலங்கும் திருமதிலும் |
| கோவில் சிறப்பு: |
சொர்க்கத்து அளவி நிற்கும் துவச மணித் தம்பங்களும்36 கற்கள் இழைத்து இலங்கு கனமான ஸ்தூபிகளும் எங்கும் சிவாலயமும் |
| 180 |
| எழிலான லிங்கங்களும் தங்கத்தால் போட்டிருக்கும் தள வரிசைசித்திரமும் மூலைக்கு மூலை முத்தால் விளக்குகளும் சாலைக்குச் சாலை தங்க விளக்குகளும் |