பக்கம் எண் :

மதுரை வீரன் கதை33

  

தேர் விளக்கு சீர்விளக்கு

185

     திருவாட்சி நலவிளக்கும்
பார்விளக்கு கோபுரத்தில்
     பதித்த விளக்குகளும்
சொல்லு நவமணிகள்
     சொலிக்கும் விளக்குகளும்
இல்லா விளக்கும்இந்த
     ஈரேழு உலகில் இல்லை
 

வேந்தன் வழிபாடு:
 
அல்லும் பகலும்
     அறுத்து எரியும் சந்நிதியில்
வாழும் மறையவர்கள்

190

     வரிசை எடுத்துப் பலர்
சூழும் படி அரசன்
     சமூகம் வந்துமே வாழ்த்தி
அந்த மறையோர்கள்
     அரசனைக் கோயில் உள்ளே
சிந்தை மகிழ்ந்து தவம்
     செய்யச் சிவலிங்கம் முன்னே
கொண்டு விடுத்த பின்னர்
     கொற்றவனும் கைகுவித்து
தொண்டு புரிந்து சிவன்

 

195

     துங்க அடி தொழுதான்
கண்டார் தமக்கு முத்தி
     அளித்து அருளும் காசி நதி
தொண்டு புரிந்தோர்க்கும்
     சொர்க்கம் கொடுக்கும் லிங்கம்
க்ஷேத்திரத்தில்37 சேர்ந்தோர்க்கு
     சிவலோக ஈ யுலிங்கம்
தோத்தரித்த38 பேர்களுக்கு
     சூழ்வினை நீங்கு லிங்கம்

ம-க-3