பக்கம் எண் :

34மதுரை வீரன் கதை

  

வேண்டும் வரங்கள் எல்லாம்

205

   விரும்பிக் கொடுத்த லிங்கம்
யாண்டும் பிறவாத் தன்மை
     யார்க்கும் கொடுத்த லிங்கம்
எந்தத் தலத்தும்
     இணையில்லா படிகலிங்கம்
இந்தத் தலத்து மேன்மை
     எய்தும் விசுவலிங்கம்
தன்னைப் பணிந்த அரசன்
     தாழ்ந்து அடி வணங்கி
எந்தனுக்குப் பிள்ளை

205

     ஈந்து அருள் செய்யும் என்று
பூசை நை வேத்தியங்கள்
     புரிவித்து நல்லிசைகள்
ஆசையுடன் பாடி
     ஆனந்தக் கூத்தாடிக்
காவலர் அரண்மனைக்குள்
     காவலனும் போய் புகுந்து
 
அறம் புரிதல்
 
ஆவல் உடனே அன்னம்
     அருந்தி கொலுவிருந்து
மந்திரி மார்களைத் தான்

210

     வகைவகையாய் வரவழைத்து
தந்திரி மார்களையே
     தந்திரமாய் வரவழைத்து
நீதி மன்னர் பக்கலிலே
     நின்றவரைப் பார்த்துரைப்பான்
“அடிக்கடி நன் மதி சொல்
     அமைச்சர்களே! கேளுங்கள்
படிக்குள் விளங்குகின்ற
     பலமான தானம் எல்லாம்