| என் பெயரால் அட்டதிக்கும் 215 |
எழில் பெறவே செய்வீர் என நன்மதி சேர்மந்திரி மார் நாராதிபனார் சொல்கேட்டு திக்குக்கு திக்கு திரளான சத்திரமும் தொக்கு39 உலகம் எங்கும் சொல்ல அரிய வாவிகளும் மண்டல மெங்கும் வகைவகையாய் கோவில்களும் கண்டங்கள் என்பதிலும் |
| 220 |
கனத்த மடந்தடமும் கட்டுவித்தார் காசிநகர் காவலன்றன் சொல்படிக்கு பட்டத்து அரசர் எல்லாம் பார்த்து மனமகிழ! கோடி பிராமணர்க்குக் கொடுத்தான் செம்பொன்கோடி தேடிப்பல தருமம் செய்துவிட்டான் தேர்விஜயன்! |
| 225 |
கன்னிகா தானம் கணக்கில் ஒரு கோடி அன்னம் இடுதானம் அருவில் பலகோடி பூதானம் வேதியர்க்குப் போற்றும் பலகோடி கோதானம் அந்தணர்க்குக் கொடுத்தான் பலகோடி நீர் பந்தல் பூமி எங்கும் நிகரில் பல கோடி மோர்ப் பந்தல் அம்புவியில் மொழியில் பலகோடி |
| 230 |