பக்கம் எண் :

36மதுரை வீரன் கதை

  

அரமை40 பிணம் சுடுதல்
     அதுவும் பல கோடி
பறவைச் சிறை விடுதல்
     பாரில் பல கோடி
கண்ணாடி காதோலை
     கண்மருந்து பெண்போகம்
வண்ணானோடு கண்ண
     மயிரின சிறைகளைதல்
விலங்கிற்கு உணவு

235

     விலை கொடுத்து உயிர்காத்தல்
துலங்கு மகப்பால் கொடுத்தல்
     சோலைச் சிறைச் சோறிடுதல்
தின் பண்ட நல்கல்
     சேய்வத் தலைய மிடல்
வன் கல்வி ஓர் உணவு
     வாய்த்த பசுவிற்குப் புல்
இந்த வகைத் தருமம்
     இறைவன்41 கொடுத்த பின்பு
அந்தமுடன் சிவனை

 240

     அரசன் மனைவியோடும்
சந்ததமும்42 காசியில் வாழ்
     சங்கரனைத் தானோக்கி
சிந்தை மகிழ்ந்து
     செய்தார் பல விரதம்
 
கரு உயிர்த்தல்:-
   
அந்த வகை அறிந்தே
     ஆதி சிவன் அன்போடு
சந்தானம்43 காசி மன்னன்
     தன் மனைவிக்கே கொடுத்தார்
மேகந்தனை பழிக்கும்

245

     மெல்லிய நற்கூந்தலினாள்