பக்கம் எண் :

மதுரை வீரன் கதை37

  

தோகை மயிலைப் பழிக்கும்
     சொல்ல அரிய சாயலினாள்
சந்திரனை கண்டு
     தயங்கும் திரு முகத்தாள்
இந்திரருக்கு ஒப்பாக
     விளங்கு மழகு உடையாள்
அன்னந்தனைப் பழிக்கும்
     அசைந்த திருநடையாள்
மின்னலைப் பழிக்கும்
     மேகலைப் பூணுடையாள்
பம்பரத்தைத்தான் பழிக்கும்

250

     பணைத்த44 இளமுலையாள்
செம்பொற் சரிகை
     சிறக்கும் எழிற்கலையாள்
அம்புவி மேலே
     ஆர்ந்த46 புருவச் சிலையாள்
கம்ப வாழைத் தொடையாள்
     கற்பு மிகு நிலையாள்
துளவி மகாராஜனுக்குச்
    சொல்லும் உயிர் துணையாள்
வளம்மிகுந்த கற்பூர

 255

     வல்லி திரு வயிற்றில்
மங்கை அணி சிவன் அருளால்
     கருத்திரண்ட காலையிலே
மங்கைக் கரசி
     மதி மயக்கம் ஆனாள் காண்!
 
கருவளர்தல்
   
மூன்றான் திங்களிலே
     முலைகறுத்து முகம் வெளுத்தாள்
தோன்றா மயக்கம் மிகத்
     தோற்றாமுடி வாடி நின்றாள்

260