நான்கான திங்களிலே நன் மசக்கை கொண்டாள் காண் தேன்கதலி மாவருக்கை தித்திப் பிலிச்சை கொண்டாள் ஐந்தான திங்களிலே ஐம்பொன் போல் மேனி கொண்டாள் சிந்தா குல47 மிகுத்துச் சிந்தை மிகத் தளர்ந்தாள் ஆறான திங்களிலே |
| 265 |
அடி வயிறு தான் தளர்ந்தாள் வீனான ஏழு திங்கள் மெல்லிடை சிறுத்தாள் எட்டான திங்களிலே எண்ணாது எண்ணி நின்றாள் ஒட்டும் என்பான்48 திங்களிலே உறக்கம் மிக விடுத்தாள் |
பிள்ளை பெறுதல் |
பத்தான திங்களிலே பாலகனைப் பெற்றெடுத்தாள் முத்தான வாய் திறந்து |
| 270 |
முதல் மகனும் தான் அழுதான் ஆயிரம்கோடி அழகுள்ள சூரியன் போல் மாயிறு49 ஞாலத்தில் வாய்க்காத இரத்தினம் போல் தங்கத்தைக் காய்ச்சித் தரையில் கவிழ்த்தது போல் ஒருகோடி சூரியரை உருக்கிக் கவிழ்த்தது போல் இருகோடி சந்திரரை |
| 275 |
எடுத்துக் கவிழ்த்தது போல கோடி மதன் உருக் கொண்டு திரண்டதுபோல் |