பக்கம் எண் :

மதுரை வீரன் கதை39

  
பிள்ளையை வாழ்த்தல்
 
நீடிய பூமியிலே
     நிருபன் பிறந்த உடன்
தேவாதி தேவர் எல்லாம்
     தேன் மாரிதான் பொழிந்தார்
பூஉலகம் எல்லாம்
     பூமாரி தான் பொழிந்தார்
அந்தரத் துந்துபிகள்                                  

280

     ஐந்து முழக்கி விட்டார்
இந்திரன் வானவர்கள்
     எல்லோரும் வாழ்த்தலுற்றார
மண்டலத்தில் உள்ளவர்கள்
     மங்கள வாழ்த்து உரைத்தார்
விண்டலத்தில்50 உள்ளவர்கள்
     வித விதமாய் வாழ்த்தி நின்றார்
பாலகனைப் பாரில் உள்ளோர்
     பலரும் வந்து பார்த்தார்கள்
கொடி51 சுற்றி தான் பிறந்த

285

     குழந்தைதனைப் பார்த்தார்கள்
துடியிடையோர் தோழி மார்
     துரிதமுடன் ஓடி வந்து
 

தாதிமார்கள் கூற்று:
 
தொல்லு உலகை ஆண்டு
     வருந்துளசி மகாராசன் முன்பு
வல்லகரம் குவித்து
     வாழி என்று வாழ்த்து உற்றார்
“எங்கள் குலதெய்வமே
     இறைவரேநீர் கேளீர்!
மங்காத செல்வம் உள்ள
     மன்னவரேநீர் கேளீர்

    290