ஆனால், பயனில்லை. விடுதலையானவரை எப்படி அங்கேயே வைத்திருப்பது?  கன்றைப் பிரியும் பசுவைப் போல் கலக்கத்துடன் வெளியேறினார் சரோஜினி தேவி.  * * *        அது ஒரு பெரிய மண்டபம். அங்கே கவியரசி மாலை 6 மணிக்குப் பேசப் போகிறார் என்பதை அறிந்து பெரிய கூட்டம் கூடிவிட்டது. எள் விழக்கூட இடமில்லை ! 
       அச் சமயத்தில், மின்சாரத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டு விட்டது. விளக்குகள் எரியவில்லை ;  மக்கள் முகத்தில் ஏமாற்றக் குறி படர்ந்தது.
       அப்போது சரோஜினி தேவியும் வந்து விட்டார். இருட்டாக இருப்பதைப் பற்றி அவர் கவலைப்பட வில்லை. நேராகச் சென்று மேடைமீது ஏறினார் ;  பேச ஆரம்பித்தார். ஆரம்பித்ததும், இருள் விலகிவிட்டது.
       உடனே, சரோஜினி தேவி ‘லைட், லைட்’ என்ற ஓர் ஆங்கிலப் பாடலை அபிநயத்துடன் பாட ஆரம்பித்தார். சமயத்திற்குப் பொருத்தமாயிருந்த அந்தப் பாடலைக் கேட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.   * * *        சரோஜினி தேவி ஒரு முறை சிறையிலிருந்து விடுதலை பெற்று அலகாபாத்துக்குச் சென்றார். அவர் போய்ச் சேருவதற்கு முன்பே, அவருடைய  |