| 28 | பெரியோர் வாழ்விலே  |   பெட்டிகளும் பிற பொருள்களும் அங்கு வந்து தயாராகக் காத்திருந்தன.
       சரோஜினி எல்லாப் பெட்டிகளையும் பார்த்தார். “இவ்வளவு பெட்டிகள் எதற்கு?  இந்தப் பெட்டி ஒன்று மட்டும் இருந்தாலே போதும். மற்றவற்றை ஊருக்கே திருப்பி அனுப்பிவிடுங்கள்” என்று அங்கிருந்தவர்களிடம் கூறினார்.
       உத்தரவுப்படியே பிற பெட்டிகள் திருப்பி அனுப்பப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட பெட்டியில் தான் தம்முடைய உடைகள் இருக்கின்றன என்று சரோஜினி நினைத்திருந்தார். ஆனால் பெட்டியைத் திறந்ததும் அவர் ஏமாந்து போய்விட்டார் ! அதில் சரோஜினி தேவியின் சேலையோ, ரவிக்கையோ இல்லை ;  சில பாத்திரங்களே இருந்தன.
       அதுகண்டு சரோஜினி வருந்தவில்லை. பெட்டியிலிருந்த ‘டீ செட்’டைக் கையிலே எடுத்தார். அதை உற்றுப் பார்த்துக்கொண்டே, “ஐயோ, என் ‘டீ செட்’டே ! உன்னை நான் எப்படி உடுத்துவேன் !”  என்று சிறுபிள்ளைபோல் குதித்துக் கொண்டே கூறினார் !  (சரோஜினி தேவி)
  |    |  
  |  
  |   
				
				
				
				
				
				
				
				 | 
				 
			 
			 |