| தோசை நல்ல தோசை | | தோசை நல்ல தோசை - அம்மா சுட்டுத் தந்த தோசை. ஆசை யாக எனக்கே - என் அம்மா தந்த தோசை. வட்ட மான தோசை - அது மாவில் சுட்ட தோசை. தட்டு நிறைய நிறைய - அம்மா சுட்டுத் தந்த தோசை. காசு கேட்க வில்லை - என்னைக் காக்க வைக்க வில்லை. தோசை வேணும் என்றேன் - அம்மா சுட்டுச் சுட்டுத் தந்தாள். ஒன்று, இரண்டு, மூன்று - என்றே உள்ளே பிய்த்துப் போட்டேன். இன்னும் ஒன்று, ஒன்று - என்றே எடுத்து, எடுத்து வைத்தாள். | | |
|
|