அன்னம் என்னும் பெண்ணைப் பெற்றவர் வணிகர் தனபதி! இதற்காதத்
தமிழ்ப் புலவர் கூட்டமே அவரைப் பாடலாம்! மாநாய்கன் பேரை இன்றும்
நாம் மறக்காமலிருப்பதற்குக் காரணம், அவன் மகள் கண்ணகிதானே,
அன்னத்தின் தந்தை என்ற ஒரு பெருமைக்காக ஆயிரம் பாடல் பாடலாம்!
ஆனால் நான் ‘தனபதி சதகம்’ என்று நூறு பாடல் பாடப் போகிறேன்.
என் திருமணத்தன்று, உன்னைப் பெற்றுக்கொண்டு அந்தச் சதகத்தை
அவர்க்குப் பரிசளிக்கப் போகிறேன்’
அன்னம் :
என்னைப் புகழ்ந்தது போதும். நிறுத்துங்கள்!
இராசேந்திரன் :
கண்ணா, புறப்படுகிறேன். திரும்பி வருவதற்குள் திருமண
ஏற்பாட்டைச் செய்து வை. நானும் தந்தையாரும் உன் திருமணத்தில்
நேரில் கலந்து கொள்கிறோம். சென்று வருகிறேன்.
[இராசேந்திரன் புரவியில் புறப்படுகிறான். தாமரைகண்ணனும் அன்னமும் இணைந்து நின்று விடை தருகின்றனர்.]
-திரை-
முற்றும். |