பக்கம் எண் :

காட்சி - 20135

அம்பலம் : நான் சொல்றேனுங்க! தாமரைக்கண்ணன் தம்மைப் பாடணும்னு
  கொள்ளை ஆசை இவருக்கு; புலவரோ பாட மறுக்கிறாருங்க!
 
அன்னம் : புலவர் பாடும் புகழ்க்குணம் என் தந்தையாரிடம் இல்லை.
  அதனால் என் காதலர் பாட மறுத்தார்.

தனபதி : என்னைப் பாடினால் என் பெண்ணைத் தருகிறேன். என்னைப்
  பாடாமல் திருமணம் நடக்காது.

தா. கண்ணன் : வணிகரே, உம்மைப் பாடினால், அன்னத்தை எனக்குப்
  பரிசளிக்கிறீர்களா?

தனபதி : ஆமாம்! ஒரு பாட்டுப்பாடு போதும்; உடனே என் மகள்
  உனக்குரியவளாகி விடுவாள்.

தா. கண்ணன் : ஒரு பாடலென்ன! உம்மீது ஒரு நூறு பாடல் பாடுகிறேன்.

தனபதி : ஆ! என்மீது நூறு பாடல் பாடுகிறீர்களா? இதுவன்றோ பேறு!
  பெறற்கரும் பேறு!

அன்னம் : தாமரைக்கண்ணா, காதலுக்காகக் கொள்கையைக் கைவிடலாமா?
  புலவர் பாடும் புகழுடையாரை யன்றி வெறும் பொருளுடையாரைப்

   பாடமாட்டேன் என்றீர்களே! என்னை மணக்கும் சுயநலத்தால், அதை
  மாற்றிக் கொண்டீர்களா? பொன்னுக்குப் பாடாத புலவர் பெண்ணுக்காய்ப்
  பாடுவது இழிவு!

தா. கண்ணன் : அன்னம், நான் சுயநலத்துக்காகக் பாடவில்லை. உங்கள்
  தந்தையார் இப்போது புலவர் பாடும் புகழுடையவராகிவிட்டார். கண்ணன்
  பரம்பரைக்குச் சொந்தமான தமிழ்மண்டபத்தைக் காத்த