பக்கம் எண் :

134வளவன் பரிசு

இராசேந்திரன் : கலங்காதே தாமரைக்கண்ணா! நான் இப்போது பிரிந்து
  சென்றாலும், மிக விரைவில் உன்னைச் சந்திப்பேன். நேரே போசள
  நாட்டுக்குப் போகிறேன். தந்தையுடன் திரும்பி வந்ததும். செய்தி
  அனுப்புகிறேன். பொன்னமராவதி போகும்போது நீயும் வருகிறாய்,
  மறந்துவிடாதே!

தா. கண்ணன் : இளவரசே, உங்களால் கண்ணன் மண்டபம் தப்பியது!
  இப்போது இருக்கும் மண்டபம் கரிகாற்சோழர் கொடுத்ததல்ல; இளவரசர்
  இராசேந்திரர் ஈந்தது.
 
இராசேந்திரன் : தவறு தாமரைக்கண்ணா! அன்னத்தின் துணையும்

   துணிவும் இல்லையென்றால் நாம் பாண்டியரைக் கண்டு மீண்டு
  வருவதற்குமுன் மண்டபம் இடிந்து சரிந்திருக்கும். உண்மையில் கண்ணன்
  மண்டபத்தை இனி அன்னம் மண்டபம் என்று அழைப்பதே சரி.
  போசளத்திலிருந்து நான் திரும்புவதற்குள் உன் திருமணத்தை முடித்து

   விடாதே!

  [இவ்வாறு சொல்லும்போதே அம்பலத்துடன் அங்கு வருகிறார் தனபதி]

தனபதி : நடக்காது! தாமரைக்கண்ணன் அன்னத்தை மணப்பது நடக்காது!

இராசேந்திரன் : இவர்....

அன்னம் : என் தந்தையார், இளவரசே!

தனபதி : ஓ, இளவரசரா! வணக்கம் இளவரசே!

இராசேந்திரன் : அது இருக்கட்டும். கண்ணன்-அன்னம் கடிமணம் நடவாது
  என்று கூறினீர்களே, ஏன்?