பக்கம் எண் :

காட்சி - 19133

  சோழ நாட்டை உன் தந்தையார்க்குத் திருப்பிக் கொடுக்கப் போகிறேன்.
  வீராபிடேகம் முடிந்ததும் நான் பொன்னமராவதி சென்று அங்குத்
  தங்கியிருப்பேன். நீ போசளநாடு சென்று, இராசராசரை
  அழைத்துக்கொண்டு அங்கு வா! சோழநாட்டை உன் முன்னிலையில்
  சோழ அரசர்க்குத் தருகிறேன்.

இராசேந்திரன் : (குரல் தழதழக்க) நன்றி, நன்றி நன்றி!

சு. பாண்டியர் : தாமரைக்கண்ணா, நீயும் அப்போது இளவரசனுடன் வா!
  உன் அன்னத்தை அதற்குள் மணந்து, மனைவியாக்கி உடன் அழைத்து
  வா!

தா. கண்ணன் : அப்படியே அரசே!

சு. பாண்டியர் : விழுப்பரையரே, இருள் சூழ்வதற்கு முன் இந்தக் கண்ணன்
  மண்டபத்தைப் பார்த்து வருவோம். வாருங்கள்.

  [சுந்தரபாண்டியன் முன்செல்ல, விழுப்பரையரும், காங்கேயரும், மழவர்

   மாணிக்கமும் பின் தொடர்ந்து செல்கிறார்கள்.]

                         
-திரை-

                      காட்சி - 20

இடம் : உறையூர் எல்லையில் உள்ள சோலை.

நேரம் : காலை.

தோன்றுவோர் : இராசேந்திரன், தாமரைக்கண்ணன், தனபதி, அம்பலம்,
  அன்னம்.

  [இளவரசன் இராசேந்திரன் குதிரையுடன் விடை பெற்றுச்செல்ல நிற்கிறான்.
  தாமரைக் கண்ணனும் அன்னமும் பிரிவுத்துயரை யுணர்ந்து

   கலங்குகிறார்கள்.]