பேரரசே, பழிவெறி இப்போது தணிந்திருக்க வேண்டும். இனி இடிப்பதை,
எரிப்பதை நிறுத்துங்கள்!
சோழ நாட்டு மக்கள் பட்ட துயரம் போதும். சோழ நாடு கொண்டருளிய
சுந்தர பாண்டிய தேவர்
என்ற புகழ் வந்துவிட்டதே போதும்!
வேண்டுமானால் குலோத்துங்கன் மதுரையில் வீராபிடேகம்
செய்து
கொண்டதுபோல, சோழரின் தலைநகரில் ஆயிரத்தளியின் அபிடேக
மண்டபத்தில் நீங்கள்
வீராபிடேகம் செய்துகொள்ளுங்கள்?
சு. பாண்டியர் :
அவைக்களப் புலவரே! உங்கள் அறிவுரைக்குத்
தலைவணங்குகிறேன். காங்கேயரே,
போர் நிற்கட்டும்! இனி ஒரு
புல்லுக்கும் புழுவுக்கும் புழுதிக்கும்கூட நம் படையால் தீங்கு
நேரக்கூடாது.
இப்போதே தஞ்சைக்கு ஆளனுப்பி என் ஆணை
அறிவியுங்கள். படைகளை ஒரு முகப்படுத்தி முடிகொண்ட
சோழபுரத்துக்கனுப்புங்கள். அங்கே சோழர் முடி சூடிக்கொள்ளும் மணி
மண்டபத்தில் வீராபிடேகம்
செய்து கொண்ட பிறகு நம் நாடு
திரும்புவோம்!
காங்கேயர் :
உத்தரவு அரசே!
சு. பாண்டியர் :
இராசேந்திரா, உன் தந்தையார் போசள நாட்டுக்குப்
போய்விட்டதாக என்
ஒற்றர் உரைத்தனர். உண்மையா?
இராசேந்திரன் :
உண்மை அரசே!
சு. பாண்டியர் :
இராசேந்திரா, சோழ நாடு கொண்டருளிய சுந்தரபாண்டிய
தேவர் என்ற பட்டத்துடன்
நான் மற்றொரு பட்டத்தையும் பெற்றுக்
கொள்ளப் போகிறேன்! சோழ நாடு கொடுத்தருளிய
சுந்தர பாண்டிய
தேவர் என்ற பட்டத்தையும் பெற்றுக் கொள்ளப் போகிறேன். ஆம் இராசேந்திரா,
வென்ற |