துணைவி! நீ வாழ்க! உறையூர் மகளிரே நீரும் வாழ்க!
காரணை விழுப்பரையர் :
அரசே! பகை வெறியையும் உங்கள் பைந்தமிழ்
வெறி தணித்துவிட்டது.
அதனால் இந்தத் தமிழ்க் கோயில் தலைதூக்கி
நிற்கிறது. பாலை வனத்தில் நிற்கும் ஒற்றை
மரம் போல, உறையூர்ப்
பகுதியில் இந்த மண்டபம் ஒன்றே உயர்ந்து நிற்கிறது.
(பாடுகிறார்.)
வெறியார் தவளத் தொடைச் செய மாறன்
வெகுண்ட தொன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டில்
அரமியத்துப்
பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப்
பாலைக்கன்று
நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு
நின்றனவே!
சு. பாண்டியர் :
விழுப்பரையரே, உம் விழுமிய பாடல் தமிழ் வேந்தரின்
செழுந்தமிழ்ப் பற்றை
உலகுக்கு உணர்த்தட்டும்! புரவலரின்
அரண்மனைகள் விழலாம்; புலவரின் புகழ்மனைகள் விழக்கூடாது!
கா. விழுப்பரையர் :
அரசே! சோழ நாட்டை வென்று விட்டீர்கள்!
வெஞ்சின இவுளியும் வேழமும் பரப்பி*
தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்திக்
காவியும் நீலமும் நின்று கவினிழப்ப
வாவியும் ஆறும் மணிநீர் நலனழித்துக்
கூடமும் மதிலும் கோபுரமும் ஆடரங்கும்
மாடமும் மாளிகையும் மண்டபமும் பலவிடித்தீர்.
*சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தியில் ஒரு பகுதி. |