பக்கம் எண் :

130வளவன் பரிசு

அன்னம் : மிரட்டவில்லை, அரசே! உண்மையைக் கூறினோம்! இதை
  இடித்தால் கீழே குதித்து உயிர்த்தியாகம் செய்வோம். சோதித்துப்
  பாருங்கள்!

சு. பாண்டியர் : யார் இந்தப் பெண்?

இராசேந்திரன் : அரசே, இவள் இந்தவூர் வணிகர் மகள், அன்னம்!
  தாமரைக்கண்ணனின் ஆருயிர்க் காதலி! நாங்கள் உங்களைக் கண்டு
  திரும்பும்வரை கண்ணன் மண்டபத்துக்கு ஏதும் வராமல் காப்பதாக உறுதி
  கூறினாள். இப்படிப் பெண்கள் படை திரட்டி, அறப் புரட்சி செய்வாள்
  என்பது எங்களுக்கு அப்போது தெரியாது! நாம் வரும்வரை கண்ணன்
  மண்டபம் நிமிர்ந்து நிற்பது இவளால் தான்!

சு. பாண்டியர் : அன்னம்! உன் தமிழன்பை மெச்சுகிறேன். மண்டபத்தை
  இடிக்கமாட்டார்கள்! அது இன்றுபோல் என்றும் தலைநிமிர்ந்து நிற்கும்!
  நீயும் உன் தோழியரும் இறங்கி வரலாம்.

அன்னம் : நன்றி மன்னவா! நன்றி!

சு. பாண்டியர் : பத்திரமாக இறங்கி வாருங்கள்!


  [அன்னம் நூலேணியைத் தொங்கவிட்டு, அனைவரையும் இறக்கிப் பின்னர்
  தானும் இறங்குகிறாள். அரசர் முன்பு வந்து வணங்குகிறாள்.]

சு. பாண்டியர் : அன்னம், உன் அறப்போரால் எனக்கு வரவிருந்த
  அவப்பெயர் தப்பியது. நீ இல்லையென்றால் இந்நேரம் தமிழ்
  மண்டபத்தைக் தகர்த்தான் பாண்டியன் என்ற பழி வந்திருக்கும்.
  படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வந்த பாண்டியர் குடியின் சிறப்புக்
  குன்றியிருக்கும். உன்னைப் பாராட்டுகிறேன். தாமரைக்கண்ணனுக்கு நீதான்
  தகுந்த