[கர்ப்பிணி காவேரி மண்டபத்தின் விளிம்பில் நின்று கீழே குதிக்கத்
தயாராகிறாள்.
படைத் தலைவன் எண்ணுகிறான். கடப்பாரை பிடித்த
வீரர்கள், உடல் வியர்க்க நிற்கின்றனர்.
மக்கள் என்ன நடக்குமோ என்ற
எதிர்பார்ப்பில் ஊமையாகிறார்கள்]
படைத்தலைவன்
: ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு....
[தேர் ஒன்று வேகமாக வரும் ஓசை மெல்லக் கேட்கிறது.]
படைத்தலைவன் :
ஏழு....எட்டு...
[தேர், புயல் வேகத்தில் வருகிறது. கூட்டத்தினர், ‘தேர் தேர்’ என்று
குரலெழுப்பி விலகி
வழி விட, மழவர் மாணிக்கத்தின் தேர் மின்னல்
வேகத்தில் வருகிறது மண்டபத்தினருகே,
அதைத் திறமையோடு இழுத்துப்
பிடிக்கிறான் மழவர் மாணிக்கம். குதிரைகள் திணறிக் கனைத்து
நிற்கின்றன. தேரில் அரசரைப் பார்த்த வீரர்கள், “பாண்டியர் வாழ்க” என
வாழ்த்துகின்றனர்.]
படைத்தலைவன் :
மன்னர் வந்துவிட்டார்!
[படைத்தலைவன் தேரை நோக்கி ஓடுகிறான். தேரிலிருந்து அரசரும்
பிறரும் இறங்குகிறனர்.]
படைத்தலைவன் :
அரசே! உறையூர்ப் பெண்கள் மண்டபத்தை இடித்தால்
கீதே குதித்து உயிர்விடுவோம்
என்று மிரட்டுகிறார்கள்! |