பக்கம் எண் :

128வளவன் பரிசு

  இல்லை! அதனால் தமிழின் பெருமையாய் நிற்கும் அருமை மண்டபத்தைக்
  காக்கும் முயற்சியில் எங்களை இழப்போம்! இடியுங்கள்! நீங்கள்
  இடிக்கப்போவது இந்த மண்டபத்தை யல்ல! பாண்டியர் குடி சேர்த்த
  புகழ்க்குன்றை! பெண்களைக் கொன்ற பெரும்பழியைப் பாண்டியர்க்குத்
  தேடித்தரப் போகிறீர்கள். செயலைத் தொடங்குங்கள்!

கூட்டத்தில் ஒருவர் : யார் இந்த இளம் பெண்! தாருகன் பேரூரம் கிழித்த
  துர்க்கை போலப் பேசுகிறாள்?
 
அம்பலம் : அவங்க தனபதி வணிகர் பெண் அன்னம்! புள்ளிமானாய்
   இருந்த அன்னம்மா புலியாய் மாறினது எனக்குப் புதிசா இருக்குங்க!
 
கூட்டத்தில் ஒருவர் : அன்னம் வாழ்க!

கூட்டத்தினர் : வாழ்க! வாழ்க!

கூட்டத்தில் ஒருவர் : அன்னத்துக்கு துணை நிற்கும் பெண்டிர் வாழ்க!

கூட்டத்தினர் : வாழ்க! வாழ்க!

படைத்தலைவன் : வீரா, இனித் தாமதிக்கப் போவதில்லை! நான்
  எண்ணுகிறேன்! பத்து எண்ணி முடிப்பதற்குள் இந்தப் பெண்கள்
  இறங்குவதானால் இறங்கட்டும்? இல்லையேல் மண்டபத்தை இடித்துத்
  தள்ளுங்கள்!

படைவீரன் - 2 : சரிங்க!

அன்னம் : தோழியரே! மண்டபத்தில் கடப்பாரை பட்டவுடன்
   ஒவ்வொருவராகக் கீழே குதியுங்கள்!

காவேரி : முதல் வாய்ப்பு எனக்குத்தான்!

அன்னம் : ஆமாம் காவேரி! முன்னே வந்து நில்.