காட்சி - 1
இடம் : உறையூர் ஆவண வீதியில் நவமணிக்
கடை.
நேரம் :
நண்பகல்.
தோன்றுவோர் :
அன்னம், அம்பலம், தாமரைக்கண்ணன்.
[ஆவண வீதியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கிறது. பணியாள்
அம்பலம் நவமணி அங்காடியின் வாயிலில் அமர்ந்திருக்கிறான். உள்ளே
ஆசனம் ஒன்றில் அமர்ந்திருக்கும் அன்னம் பொழுது போகாமல்
பாடுகிறாள்.]
அன்னம் :
ம்ம்ம்.....ம்ம்ம்......(இசை கூட்டுகிறாள். பின் பாடுகிறாள்).
மலையழைக்குவனே கடல் தூக்குவனே
வான்வீழ்த்துவனே, வலிமாற்றுவனே
[வீதி வழியே சென்று கொண்டிருக்கும் தாமரைக் கண்ணனின் செவியில்
இப் பாடல் கேட்க அவன் விழிகள் சிவக்கின்றன. அவன் கோபத்தோடு
நவமணிக்கடைக்குள் நுழைகிறான். அம்பலம் ‘என்ன வேண்டும்’ என்று
கேட்பதற்குள், கடையில் ஒருபுறமிருந்த முத்து மாலைகளைத் தூக்கி
மறுபுறம் எறிகிறான். ஒரு பெட்டியில் இருந்த வைரங்களைக் கீழே |