|
| எண்ணியொரு வாரமதில் எப்படியும் நான்பிடித்து |
| நன்னுமுயிர்த் தூண்டியிலே நான்போட்டு வைக்கின்றேன் பார் |
| |
| சேனைபடை கூட்டிச் சேப்பிளையான் அப்போது |
| ஆனபடை மன்னருடன் அரசனையும் தெண்டனிட்டு |
| |
| வெற்றித் தமுக்கடித்து வெங்கலக் கொம்பூதி |
| மெத்தெனவே கோட்டைவாசல் வெளியே வந்துநின்று |
| |
| மற்றுநிகர் ஒவ்வாத மைந்தன் பரிமணத்தை5 |
| சித்தமதில் எண்ணித் தேவியர்க்குச் சொல்லுகிறான் |
| |
| வீரரையும் தான்கூட்டி விரசுடனே சேப்பிளையான் |
| திருவரங்கம் பேட்டை தன்வீடு வந்து சேர்ந்து |
| சேப்பிளையான் மனைவியிடம் சொல்லுகிறான் |
| சங்கப்பிள்ளை6 ஆகியதோர் தையலரே கேட்டருள்வாய் |
| “வக்கணையாய் நாம்வளர்த்த மைந்தனார் செய்தபிழை |
| |
| என்னவென்று சொல்வேன்யான் இயல்பான மனைவியரே |
| தண்ணீர்த் துறையில் தானே சிறையெடுத்துப் |
| |
| போனதொரு காத்தவனைப் பிடித்துக் கழுவில்போட |
| ஆனதினால் மன்னவனார் அனுப்பிடவே வந்தேன்டி. |
| |
| ஏவும் பணிமுடிக்க என்னலாகுமோ தான் |
| காவலனார் சொல்லைக் கடக்கவும் போறதில்லை” |
| |
| புருஷனது சொல்லப் பெண்கொடியாள் சங்கப்பிள்ளை |
| வருசைமகன் செய்தபிழை மனசுமிகத் தான்வாடி |
| |
| மனைவி கூற்று |
| “கண்ணாளா ! கட்டழகா ! காத்த பரிமணமே |
| பண்ணாத காரியமாய் பாப்பாரப் பெண்தனையே |
| |
| ஆற்றில் சிறையெடுக்க லாகுமோஇக் காலம்தன்னில் |
| காத்தவனே உன்னைநான் கனமாய் வளர்த்தேனே” |
| |
| அழுதவளைச் சேப்பிளையான் அகங்கையாலே அமர்த்தி |
| “பளுவந்த பின்பு பாடியழுதால் போமோ |
| |
| தேவிதனைக் கையால் சேர்த்தே யெடுத்தணைத்து |
| ஆவிதனை விட்டதனால் ஆவதுண்டோ? |
| |
| பின்புத்தி தான்நினைக்கும் பறச்சிபெத்த7 பிள்ளைவயன் |
| நாம்பெத்த பிள்ளையென்றால் நம்மைப்போல் ஆகாதோ? |