காத்தவராயன் கதைப்பாடல்19

எதிர்கொண்ட காத்தன்பதி கொண்ட ஊரெல்லாம்
   எங்கெங்கும் தேடுவனே.
 
     வசனம் : ஆகோ வாருங்கள் தூதர்களே நான் சொல்லிய இடமெல்லாம் தேடவணே்டும் தூதர்களே. இப்போது எங்கே தேடுவது என்றால் திரிசிரபுரத்திற்கும் மேற்கு, மதுகரைக்கும் கிழக்கு, பாண்டியனார் எல்லைக்கும் வடக்கு, காவேரிக் கரைக்கும் தெற்கு இதில் உள்ள கிராமங்கள் எல்லாம் தேடிப் பார்ப்போம் வாருங்கள் தூதர்களே.
நடை
(நாட்டுப்பாடல்)
உறையூர் தென்னூர் ஓங்கிவளர் புத்தூர்வரை
பெருகும் உய்யக்கொண்டான் வயலூர் குழுமணியாம்
 
சோமரசம் பேட்டை துடியிடைபால் நங்கபுரம்
காமரசம் பெருகும் கம்பரசம் பேட்டைமுதல்
 
அல்லூர் பமூர் அனைலை கொடியாளம்
புல்லூர் வடசேரி பொய்யாமணி மருதூர்
 
இலுப்பூர் தவத்தூர் ஏகிரி மங்கலமாம்
வளம்பெருகு பெருகமணி வய்யநல்லூர் மணித்திட்டை
 
முருங்க ளத்தூர் முத்தரச நல்பேட்டை
சித்தவரை வென்ற சிறுகமணி கள்ளபுலி
 
கொச்சி திருச்சி குண்டுலவு மணப்பாறை
நேசர் பரவுகிற ரெத்னகிரி தொகைமலை
 
கடம்பவனம் ராசேந்திரம் கருப்பூர் மேல்குடியும்
கட்டளை மணவாசி காகிஷ்ட்ண ராயபுரம்
 
சித்தர் தொழுதருளும் திருப்பிலாத் துறையழகர்
 
அரும்புமலர்ப் பூச்சொரியும் ஆதிபனங் காவேரி
கரும்பாயி சன்னதியும் காமநாய்க்கன் பாளையமாம்9
 
பூசுரர்கள் கொண்டாடும் பொன்னி நதிக்கரையும்
ராசகம்பீர வளர்நகர் காவல் சேப்பிளையான்
 
சுற்றினோம் தென்கரையில் திருச்சினாப்
பள்ளிமுதல் சிறந்த மேற்கில்