மனஞ்சலித்துக் கடற்கரையிற் சோர்ந்து நின்றேன் மனங்கவர்ந்த கவிதைப்பெண் வந்து நின்றாள்; எனைமயக்கி ஏகிவிட்ட எழில ணங்கே என்துயரம் அறியாயோ? மற்றொ ருத்தி தனைமணந்தேன் எனநினைந்தோ சென்று விட்டாய்? தவிக்கின்றேன் உனைக்காண அருகில் வாவா! எனைமறத்தல் சரியாமோ? முறையோ? என்றேன் “என்னன்பா! உனைமறவேன் உண்மை சொல்வேன் உன்மனைவி பணிவிடையில் உனக்குப் பாவை உவந்தளிக்கும் இன்பமதில் மதலை நல்கும் இன்னமுத மழலைதனில் விழியில் மெய்யில் இற்கிழத்தி புலந்திருக்கும் விழியில் பேச்சில் என்னையினிக் காண்பரிது; குடல்வ ளர்க்க இரந்துண்போன் பொற்கரத்தில் உழைப்பால் ஓங்கும் வன்புயத்தில் விதவையர்கண் சிந்தும் நீரில் வாழ்கின்றேன் வாஅங்கே என்று சென்றாள் 5 |