102 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
ஏன் மறந்தாள்? மன்னரே உம்மை யன்றி மணந்திடேன் பிறரை என்றாள்; கன்னலே நீர்தான் என்றன் கட்படும் உலகம் என்றாள்; முன்னரே நமது நெஞ்சம் முழுமையிற் கலந்த தென்றாள்; சொன்னதைக் காற்றில் விட்டே தோகைஏன் மறந்தே போனாள்? காதலை வடித்துக் கொட்டிக் கடிதங்கள் எழுதி விட்டு வேதனை தந்தா ளன்றி விழிக்கடை தந்தாள் அல்லள்; மாதவள் மயங்க விட்டாள் மடல்களோ நூறு விட்டாள்; சோதனை செய்து தேர்ந்தார் துறப்பரோ நெஞ்சிற் காதல்? 2 |