பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்103

4. தொழில் உலகம்

தொழிலாளி

எண்சீர் விருத்தம்

மூச்சடக்கிக் கடலகத்தே மூழ்கி நல்ல
    முத்தெடுக்கும் தொழிலாளி வாழ்க்கை தன்னில்
மூச்சிருக்க வேண்டியநல் வசதி இல்லை.
    முதலாளி பஞ்சணையில் கொஞ்சும் மஞ்சள்
பூச்சுடைய மங்கையரை அழகு செய்யப்
    பூமிக்குள் அஞ்சாது நுழைந்து மின்னைப்
பாய்ச்சுகின்ற தங்கத்தைக் கொடுக்கின் றானே
    பாவம்அவன் அங்கத்தில் ஒன்றும் இல்லை!

ஆலையிலே ஆடைகளை ஆக்கு கின்றான்
    ஆனாலும் அன்னவனுக் காடை இல்லை
காலையிலே உழைக்கின்றான் விதைக்கின் றான்நெற்
    களஞ்சியத்தை நிறைக்கின்றான் உடல்வ ருந்தும்
வேலையிலே குறைவில்லை பசியை நீக்க
    வேண்டியநல் உணவெதுவும் இல்லை! இல்லை!
மாலையிலே உளம்நொந்து செல்லு கின்றான்
    மறமிக்க தொழிலாளி நிலைமை நன்றோ?

ஆடையிலே அழுக்ககற்றித் தூய்மை ஆக்கி
    அழகுசெய்து தருகின்றோன், பொலிவு குன்றத்
தாடையிலே வளருமதை வழித்தெ றிந்து
    தளிர்க்கின்ற முடிவெட்டி அழகு செய்வோன்,