104 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
கோடையிலே வருந்தாமல் முள்ளால் கல்லால் கொடுமையொன்றும் நேராமல் நடப்ப தற்குச் சோடையின்றிச் செருப்பளிப்போன் இவர்க ளெல்லாம் தொடக்கூடாச் சாதிஎன்றால் தொலைக வையம்! வளமிக்க நாடென்பர் இந்த நாட்டில் வாழஒரு வழியின்றி வறுமை தன்னால் உளம்நொந்து கூலிகளாய்ச் செல்லு கின்றார் ஒப்பற்ற என்னினத்தார்; வேற்று நாட்டார் கிழங்கென்றும் கீரைஎன்றும் எண்ணி நம்மைக் கீழாக்கி விட்டஇந்த நிலை யொழிக்கக் களங்காண வேண்டாவோ வீரம் மிக்க காளைகளே ஏனின்னும் பாழு றக்கம்? 4 |