106 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
பதுங்கி வந்தது பாழும் பூனை; ஒதுங்கி நடப்பினும் உயிர்பெறல் அரிதென மீண்டும் சென்று கூண்டுள் நுழைந்தேன் மீளா அடிமை நேர்ந்தது மேலும்; என்னிலை தானே இந்நாட் டவர்க்கும்! நன்னிலை தந்தான் நலமுயர் காந்தி விடுதலை என்றே வெளியில் வந்தனர்; கெடுதலை உள்ளம் கிடைத்ததைச் சுருட்டும் சுரண்டல் பூனை துரத்தல் காணீர்! இருண்ட வாழ்வுதான் ஏகுவ தென்றோ? பூனைகள் தொலையும் பொழுதுதான் என்றோ? கொடுமை கொடுமை என்று கூவிச் சலித்தது கூண்டுக் கிளியே! 37 |