110 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
வில்விட்ட அம்பெனவே விரைந்த தாங்கே வெலவெலத்துப் போனான்அப் புரவி மேலோன்; பல்விட்ட கடிவாளம் இறுகப் பற்றிப் படுத்துக்கொண் டகம்நடுங்கி அவனி ருந்த வெல்வெட்டு மெத்தையுடன் உருண்டு ருண்டு வீழ்ந்திடவே உதறிற்று; நெறிக்கி டந்த கல்வெட்டிச் சிதறுண்ட மண்டை செந்நீர் கசிந்திடவே உலகிருந்து நீங்கி விட்டான் பாட்டாளிக் கூட்டத்தைக் குதிரை யாக்கும் பணக்காரர் வாழ்வுமிந்த நிலையே தானோ? மாட்டோடு மனிதரையும் மதிக்கின் றார்கள் மனம்நொந்து பொறுத்திருப்பர் அளவு மீறின் காட்டாரோ தம்வலிமை? இங்கு வாழக் கருதாரோ தொழிலாளர்? உரிமை கேட்க மாட்டாரோ? அவரெல்லாம் உருத்தெ ழுந்தால் மனம்புரவிச் செயல்தன்னைக் காட்டி டாதோ! 5
* இப்பாடல், சாகித்திய அகாடமியால் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. |